Monday, December 24, 2018

ரசனை!!

கிறுக்கல்களையும்
சித்திரங்களையும்
ஆழ ஊன்றி
கவனிக்கத் தெரிந்த
குழந்தைகளுக்கு
மட்டுமே
அதிகம்
ரசிக்கமுடிகிறது........



உடைந்து.......

உருக்குலைந்து.....

முகத்தில்
சுருக்கங்கள்
வாங்கிய 

முதியவர்களை!!!

---இளையநிலா---

உன்னால் மட்டுமே முடிகிறது

என்னையும்
தனிமையையும்
ஒரு சேர விட்டு விட்டு போக
உன்னால் மட்டுமே முடிகிறது......


முன் வாயில் முற்றத்து
மணல் தரையில்- உன்
செருப்புகள் உதிர்க்கும்
சர சர ஒலிக்காக
எத்தனை நேரம் தான்
காத்திருப்பது....

இந்த எத்தனை
நேரம் என்பது
நான் பல முறை
உயிர்த்தெழுந்து
மரணிக்கும்
பொழுதுகள்

சாவியையும்
என் காதலையும்
வழமைப்போல்
தரை விரிப்பின் கீழ்
பத்திரப் படுத்தியிருக்கிறேன்....

திரும்பி வந்து
கதவு திறந்து


காத்திரு......  

உல் நுழையும்
காற்றோடு
என் காதலையும் சுவாசித்தபடி!!!


---இளைய நிலா---