Friday, November 18, 2022

எது வரை சொந்தம்


 

வீட்டுக்கு விலாசம் சொந்தம்
வீதிப் பெயர் மாறும் வரை

குயிலுக்கு கூடு சொந்தம்
குஞ்சுநிலை மாறும் வரை

உடலுக்கு உடைகள் சொந்தம் 
உடுக்கப்படும் வேளை வரை

வெயிலுக்கு வெய்யோன் சொந்தம்
விடியல் முதல் இரவு வரை

ஏழைக்கு வறுமை சொந்தம் 
இல்லாமை நீங்கும் வரை

கோழைக்குத் தோல்வி சொந்தம் 
குட்டக் குட்ட குனியும் வரை

வாழைக்கு கன்று சொந்தம் 
வளர்ந்து குலை தள்ளுனம் வரை

கண்ணுக்கு காட்சி சொந்தம் 
காணுகின்ற கணம் வரை

செவிக்கு குரல் சொந்தம்
சிந்தையில் பதியும் வரை

உனக்கு நான் சொந்தம்
உள்ளத்தில் இருக்கும் வரை

எனக்கு நீ சொந்தம்
இறந்து நான் போகும் வரை

பஸ்மினா அன்ஸார்