Tuesday, December 17, 2013

சிதைக்க முடிவதில்லை....




எத்தனை தான்
அரிதாரம் பூசி
திருத்த முயன்றாலும்

அழகு வண்ண 
முக்காடிட்டுy
மறைக்க நினைத்தாலும்

எவர் வந்து
எதை தந்து
பரிக்க முனைந்தாலும்

சிதைக்க முடிவதில்லை......

நெஞ்சத்தில்
மஞ்சமிட்டு
அழியாச்சின்னமாய்
பதிந்திருக்கும்
முதற்காதலை.

-இளைய நிலா-

No comments: