Friday, July 25, 2014

ஆத்மீக தேடல்

Add caption
மனிதனை பார்க்கும்
மலை மாதிரியின்றி
மலையை பார்க்கும்
மனிதன் மாதிரி.....



கடற்கரை மண்ணிலே
கால் பதித்த
ஆயிரமாயிரம் விழிகளின்
ஆத்மீக தேடல்
ஒரேயொரு தலைப்பிறை தான்!


எழுதப்ப்படாத
தன்னம்பிக்கை
கவிதைகள் மாதிரி..
பெளர்ணமி நிலவை
ரசித்து ருசிக்காத மனசுகளும்
தென்னங்கீற்றிடைவெளியில்
ஊடுருவித்தேடும்
அந்த வில் நிலா!

மேகக்கம்பளத்தை
உதறித்தள்ளி விட்டு
கீழ் வானில்
எழுந்து புன்னகைக்கும்
அந்தக்கண ஜொலிப்பு
அது-
மனசுகள் கழுவப்படும்
ஆரம்ப அடையாளம்!

ஆயிரம் பந்தல் கட்டி
அத்தனை மனசுகளும்
அணிவகுக்கத்தயார்.

ரமழானை வெறுமனே
ரசித்துக்கழியாமல்
ருசித்து வழியனுப்ப
ரம்மியமாய் இன்னுமொரு
ஈமானியக் குளியல்....
  
சுவனத்துத் தென்றல்தான்
இலட்சியமென தவங்கிடக்கும்
இஸ்லாமியக்காவலர்கள்...

இச்சைகளை கைது செய்து 
பட்ட்டினி வயிற்றுச்சிறையில்
தேடும்
 நாவரட்சி இன்பப்பெருமிதத்தின்
இனிப்பான அதிர்வுகள்...

பல்லிடுக்குகளில் இருந்து
பரவசமாய்வெளிக்கிளம்பும்
புனித  'தெளபா'ப்
பனித்துளிகள்....


இதோ-
இன்னுமொரு 
ரமழான் வந்தாயிற்று...



மனிதனை பார்க்கும்
மலை மாதிரியின்றி
மலையை பார்க்கும்
மனிதன் மாதிரி.....



இரு பதினைந்து
இரவு பகல்களாய்
இறைவனை துதிக்க...
ஈகைகளின் மலர்ச்சியில்
இருலோக பாக்கியம் பெற..
இதோ-
இன்னுமொரு 
ரமழான் வந்தாயிற்று

அபத்தை சமூகத்தை
முங்கியிருத மூடத்திற்கு
முழு வெற்றி...


ஒப்பனைகளை
ஒப்புக்கொள்ளும்
மார்புக்க்குள் நெஞ்சில்லா
மடச்சமூகம் அழித்தொழிக்க...
இதோ-
இன்னுமொரு 
ரமழான் வந்தாயிற்று...

வருடந்தோறும்
தழுவி நகரும் தென்றல்
ரமழான்..
இம்முறையேனும்
நம்ம்மால் தழுவி
நகர்த்தப்படட்டும்!

'எல்லாப்புகழும் 
இறைவனுக்க்கே...'
இதுவே ரமழானின்
நற்செய்தி!

இளைய நிலா















No comments:

Post a Comment