Saturday, September 5, 2015

கடந்த காலமொன்றில் இறந்து போனதாகச் சொல்கிறார்கள்

கடந்த காலமொன்றில்
இறந்த் போனதாகச்
சொல்கிறார்கள்


நிகழ் காலத்திலும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் இலக்கிய தந்தையை//


எதிர் காலத்திலும் 
வழக்கூடிய
வாலிபத்தாத்தா


இனி வரும் காலத்திலும்
அவருலகு இனிப்பாய்
இருக்கப்பிரார்த்தித்து 
ஆரம்பிக்கிறேன்

எனை எழுதச்சொன்னவருக்காக
ஏதோ கிறுக்கி வந்திருக்கும்
சிரிக்கி நான்...


அவருக்காக
சிறுகச் சிறுகச்
சேமித்த  கவியிது..

கண்ணீர் நூலெடுத்துக் கோர்த்து
கானிக்கையாக்குகின்றேன்
கலங்கிய மனசோடு//

தசாப்தம் தாண்டியும்
எனைத் தனித்தழச் செய்தவர்- அவர்
எனைத் தவித்தழச் செய்தவர்//


அவரிழப்பை நினைக்க
அனல் தின்ற வயிறாக
எறிகிறது மனசு..


புனல் குடித்த படகாக
தவிக்கிறது உசுரு..//


தாளம் சிதைந்ததா...?
மேளம் தலர்ந்ததா...?
கோளம் கலைந்ததா?



எஃதோ
வானம் அநுதது
என் தந்தை ஷம்ஸ்
சாந்தம் தவழக்
காணாமல் போன அந்நாளில்


அவர் நேசம்
உதறிச் சென்ற வாசம்
நாசி முழுக்கவும்
மணக்கிறது இந்நாளில்...


வண்ணத்துப் பூச்சு
வண்ணங்களும் பேசும்
ஷம்ஸ் சாளரம் திறந்து
சுகித்த உலகை//


வெண்புறாக்களும்
அகவியழும்
அவர் கிராமத்துக்கனவின் வலியை//


ஆயினும் அவர் செவி
உணரப் போவதில்லை
என் கவிதையின் ஒலியை//


வுறும் சப்தங்கள் கவிதைகளாக
திரிந்த காலமொன்றில்
கவிதையின் சப்தத்தை
சங்கீதமாக்கியவர் ஷம்ஸ்.


'வெண்புறா'
அவர் வெள்ளரிப்பிஞ்சு 
மனசின் வெளிச்ச
வெளிப்பாடு..//


எழுத்துக்களை
கருத்துக்களாய்
தைத்த அழகிய
தையல் காரர்//


அவர் அமைர்ந்திருந்த
தினகரனில் தான்
ஒரு காலம் எமக்கான
அரியாசனைகளும்
போடப்பட்டிருந்தன..//


என்னை எழுதத்தூண்டியவருக்காக
ஏதோ கிறுக்கி வந்திருக்கும்
இந்தச் சிறுக்கியைப் போல
பல பேரை...

சிற்பிகளாக செதுக்கியவர்
இந்த நல் நெஞ்சுக்காரர்



கல் நெஞ்சுக்காரர்
என்று இவரை எவரும்
கை தட்டி அழைத்ததில்லை//


அவர் தூரிகை அழகாய்
இழைத்திருக்கின்றன
எம் முகங்களை..


எம் முகவரிகளை
முத்திரைகளாக - தன் மனசில்
குத்தி வைத்திருந்த
பூஞ்சிறகுக்காரர்.


அவர் பறந்த 
இடங்களில் எப்போதும் 
காற்று இறந்து கிடந்ததில்லை


வான வில்லும் அவரிடம் 
வர்ணங்கள் கேட்டிருக்கின்றன


அப்படிப்பட்டவரைத் தான்
எல்லோரும்.......



கடந்த காலமொன்றில் 
இறந்து போனதாகச்
சொல்கிறார்கள்//


நிகழ் காலத்திலும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
அவரை எப்படிச் சொல்ல முடியும்....



வெறுமனே இறந்து
போன மனிதரென்று...



காலத்துக்கும் உறவுகளை
கலங்க வைத்த
இறவா மனிதர்
என் இலக்கிய தந்தை ஷம்ஸ்.



இளைய நிலா.
உக்குவலை

No comments:

Post a Comment