Saturday, July 24, 2021

இறையன்பிற்காகவே..!


 

துல்ஹஜ் மாதம்

ஒன்பதாம் நாளதில் ...

நோற்றிடும் அறஃபா நோன்போடு 

பொங்கிடுமே

 நம் பிரார்த்தனைகள்!


தொடர்ந்திடும்

 மறுநாள் பிறை பத்தில் 

மஸ்ஜித்களிலே ஒலிக்கிளம்பும்

தக்பீரதில் தான் துளங்கிடும்

எங்கள் உளச்சாந்தம்!!


'லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்' 

என்னும்

தீனொளிச்சுவையை

உரைத்தவளாய்....

தீமைகள் கரைத்திடவே

'ஈதுல் அழ்ஹா' 

என்னும் பெயர் தாங்கி

மலர்ந்திடுமே நம் பெருநாளும்!!


'உழ்ஹிய்யா'வினை நிறைவேற்றி

இறையன்பே 

கதியென

இஃலாஸ்ஸுடனே..

இரு கரமேந்தி 

காத்து

நின்றோம்!


தியாகம் விளைந்த

நாளிதிலே 

மக்கா மண்ணை ஏகிடவும்

க.ஃபாவில் நின்றே

தொழுதிடவும்

அறஃபா முன்றலில் கூடிடவும்

ஸம் ஸம் தன்னை பருகிடவும்

ஏங்கிடுமே

ஈமானிய

நெஞ்சங்கள்.!!


 'தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்'

என்னும் அழகிய மொழிகூறி

உறவுகளை நாம் தேடுவதும்

முஸாபஹா செய்தே கூடுவதும்...

கூடாதவொன்றாய்

மாறிவிட

கல்புகள்

நொந்தே

வாடுகிறோம்!!



உலகை ஆளும்

பெருந்தொற்று

முற்றாய்

முழுதாய் நீங்கிடவும்

 நலமே யாவரும்

வாழ்ந்திடவும்

சமூக இடைவெளி

பேணியே நாம்

உன்னிடம் விடுத்திடும் துஆக் கனைகள்

வையகத்தினை வளமாக்க..


சங்கையான நாளிதிலே

வல்லவனே நீ அருள் புரிவாய்!!


 'அல்லாஹு அக்பர்'!!


*பஸ்மினா அன்ஸார்*

2021.07.21

No comments:

Post a Comment